புதன், 23 நவம்பர், 2016

பெரிது பெரிது அதனிலும் பெரிது, ஆறுமாதங்கள் பெரிதா அல்லது அணுக்குண்டு பெரிதா ?

அணுவாயுத அழிவை விட, ஒரு பேரழிவு இந்த உலகத்தில் இனி மேல் வரும் என்றால் அது தண்ணீர், உணவு மற்றும் மருந்து மாத்திரைகளின் பற்றாக் குறையாகத் தான் இருக்க முடியும்,

ஒரு ஆறுமாத காலம் பல்பொருள் அங்காடி (சுப்பர்-மார்கெட்) மருந்தகங்கள் (மெடிக்கல்-ஷாப்பு) தண்ணீர், எரிவாயு, மின்சார வாரியம் மற்றும் மருத்துவமனைகள், பொதுப்பணி மாநகரசபை தமக்கான பணிகளை ஒரு ஆறுமாத காலம் நிறுத்தி வைத்தால் எப்படியிருக்கும்  நினைக்கும் போதே கை கால் பதறுது ஒதறுது      அவ்விடம் ... எப்படி.?

long-queue.jpg
பல்லு குத்தும் சிறு குச்சியைக் கூட கடைகளில் வாங்கும் நிலைமைகளில் த்தான்  இன்று நகர்புற மக்கள் வாழ்கின்றனர், இந்த நிமிடம் வரை எங்கள் வாழ்வாதாரங்கள் ஒன்று கூட எங்கள் கைகளில் இல்லை என்று சொன்னால், நம்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்த உலகத்தின் அத்துனை அதிகாரங்களும், அரசு மற்றும் அதன் அதிகார வர்க்கத்திடமும் தான் கொட்டிக் கிடக்கின்றது, இந்த சமூக பிணைப்பிலிருந்து வெளியில் வந்து வாழ எந்த ஒரு மனிதனாலும் முடியாத காரியம்,

80 விழுக்காடு  மக்கள் இன்று பல்பொருள் அங்காடிகளையும், அரசின் திட்டங்களையும், சமூகநல உதவிகளையும் தங்களை பீடித்திருக்கும் தீராத நோய்களுக்கான மருந்துகளை வாங்குவதற்காக மருந்தகங்களையும் நம்பித்தான் வாழ்கின்றனர்.

இதில் ஒன்று கூட நடைமுறைவாத ஒருங்கிணைப்பை விட்டு விலகும் போது, பிரச்சனைகள் நம்மை சுற்றி தடிமனாக வளர்கின்றது. சிறு தோட்டங்களை நம்பி வாழ்ந்த கிராமத்து மக்கள் கூட இன்று மரபணு கலப்பட விதைகள், நவீன வேளாண்மை மற்றும் பெரும் பண்ணை விவசாயத்தின் தலையீடு,

அவர்களின் பாரம்பரிய இயற்கை வேளாண்மையை கைவிடும் நிலைமைகளில் த்தான் இன்று வாழ்கின்றார்கள், இது போதா தென்று கடலை நம்பி வாழும் கடலோர மக்களின் மீன் பிடிக்கும் உரிமைகளை இழக்கும் காலம் வெகு விரைவில் வரும். இது ஒன்றும் மனித சட்டங்கள் கிடையாது, இது இயற்கையின் கட்டாயம்.

சீனா: மேற்க்கத்திய தொழில் நுட்பங்களை பிரதி எடுத்து வளர்ச்சி அடைந்தாலும் அந்த நாட்டு மக்களின் கடினமான உழைப்பிற்கு இந்த உலகம் மதிப்பளித்து தலை-வணங்குகின்றது, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்ற, கொள்கலன்-கப்பல் போக்குவரத்து, எண்ணிலடங்கா துறைமுக  சேமிப்பு அறைகள் மற்றும் களஞ்சிய சாலைகள்,

ஒட்டுமொத்த மனித சமூகத்தின் பண்ட-மாற்று தேவைகளை பூர்த்தி செய்தாலும், மோசமான கால நிலை, கடற்கொள்ளை, கடற்-சண்டை, உலக பொருளாதாரத்தின் சரிவு, தனி மனித சர்வாதிகார போக்கு, அங்ஙனம்  எதிர் காலத்தில் அச்சுறுத்தும் ஒரு சக்தியாக மாறக் கூடும்.

எங்களுடைய தாத்தா-பாட்டி இதில் ஒன்றைக் கூட நம்பி வாழ்ந்ததில்லை கடவுளையும், இயற்கையையும், வயல் வரம்பு, வீட்டுத்தோட்டம், மாந் தோப்பு, தென்னன் தோப்பு,  ஆடு, மாடு, கோழி என்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வாழ்வாதாரங்களை அமைத்து,

அரிசிமா இடித்தல், காய்கறிகள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் வற்றல், ஊறுகாய் பனங்கிழங்கு ஒடியல், மரவள்ளிச் சீவல், தயிர் மோர் நெய்  என்று உணவுப்பொருட்களை தயாரித்து, தங்களுடைய கைகளை நம்பி சந்தோஷமாக வாழ்ந்தார்கள்,

இதெல்லாம், நம் கைகளை  விட்டு   பல காலம் ஆச்சு என்று நீங்கள் முறுமுறுப்பது சரிதான் இதற்கான மந்திர பரிகாரம் தான் என்ன தொடர்ந்து விவரிக்க (….) உலக பொருளாதாரத்தை பூசர்மா பூசி, மஞ்சுவிரட்ட விட்டாலும் அது ஒரு நாள் ஓரங்கட்டுவது உண்மை தான்.

இங்ஙனம் தொங்கி நிற்கும் இந்த சமூக பிணைப்பிலிருந்து வெளியேற, சிறு தோட்டம், சிறு பண்ணை அமைப்பது  தான் உங்கள் எதிர் கால வாழ்க்கைக்கு சிறந்ததொரு அரண்.

இப்ப சொல்லுங்கள் எது பெரியது என்று இந்த உலகத்தை அழிக்கப் போவது அணு  ஆயுத பேரழிவா அல்லது பெருகி வரும் மக்கள் தொகையா என்று ?

Unbenannt - 1.jpg
ஸ்ரீ ராம ஜெயம்  ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக