ஞாயிறு, 28 மே, 2017

அழகான கூட்டுக் குடும்பம்  ….. ❤❤
பன்மொழி குடும்பம்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ஜே டிரம்ப்,  அவர்கட்கு எத்தனை மொழிகள் பேசத் தெரியும்..?

டிரம்ப் அவரது, முந்தைய நான்கு தலைமுறை  தாத்தா பாட்டியினர்  யாரும் தாய் மொழியாக ஆங்கில மொழியை  கொண்டிருக்க வில்லை   (ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கலாம்)  மாறாக ஜேர்மன் மொழியில் பேசும் தந்தை தாத்தா மற்றும் தாய், மேரி அன்னி,  பாட்டி மற்றும்  உறவினர்கள் தாய்வழி மொழியாக இசுக்காட்லாந்து  "ஸ்காட்ஸ் கேலிக்" மொழியை கொண்டிருந்தனர் மேலும் தாய்வழி மற்றும் தந்தைவழி ஆங்கிலம் பேசும் திறனுள்ள பெற்றோர்களாக  இருந்திருப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

டொனால்ட் டிரம்ப்க்கு,  ஆங்கிலம் மட்டும் தான் தெரியும் அதையும் இலக்கண  பிழையுடன் பேசுகின்றார் என்ற குற்றச் சாட்டுகளும் உண்டு.

டிரம்ப் அவரது,  இரண்டு துணைவியாரும்  தாய் மொழியாக ஸ்லோவேனியன்  மொழியை கொண்டிருந்தார்கள் அவரது முதல், மனைவி இவானா  செக் இன்,  தற்போதைய மனைவி மெலானியா, ஸ்லோவேனிய ஆக, மொத்தத்தில் டிரம்ப் அவர்கட்கு நிச்சயமாக  ஸ்காட்ஸ் கேலிக் ,ஸ்லோவேனியன், ஜெர்மன் மொழியை புரிந்து கொள்ளும் ஆழுமை மற்றும் பேசத் தெரிந்திருக்கும். அவர் பிரபல தொழிலதிபராக உலகம் முழுவதும் சுற்றிவந்தமையால் மற்றய பாஷைகளும் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். (பிரஞ்சு, இத்தாலிய, ரஷியன் மற்றும் சீனா....?) அவரது குழந்தைகள் பெரும்பாலும்  ஆங்கிலம் உட்பட பன்மொழிகளைசரளமாக பேசத் தெரிந்தவர்கள். இருந்தாலும் என்னால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை.

முதல் பெண்மனி, மெலானியா டிரம்ப் ஆறு மொழிகளை   சரளமாக பேசத் தெரியும் என்பதை  தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர்களே சொல்லி இருக்கிறாங்க.
- ஆங்கிலம்
- ஸ்லோவேனியன் (தாய் மொழி)
- செர்பியன்
- பிரஞ்சு
- இத்தாலிய
- ஜெர்மன்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ஜே டிரம்ப்,  அவர்களது குடும்பம், வசதிபடைத்த குடும்பம் மட்டுமல்லாமல் படித்து பட்டம் பெற்ற அழகானதொரு கூட்டுக் குடும்பமும் கூட.

GTY_trump_crew_jef_151118_4x3_992.jpg

 sri rama jyam-2016.jpg

சனி, 27 மே, 2017


📭 மலை ஆடுகள்:  எரிமலை சீற்றத்தை  முன் கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளது.  அந்த ஆடுகள் ஒரு மாதத்திற்கு முன் கூட்டி அந்த மேச்சல் நிலங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளும் அறிவுள்ள ஜீவன். அந்த மலை ஆடுகள் எப்படித்தான் எரிமலை சீற்றத்தை முன் கூட்டியே  அறிந்து கொள்கின்றன  என்பது தான்   சுவாரஸ்யமான சமாச்சாரம்,

மண்னில் இருந்து கிளம்பும் வாயுக்களின்  தன்மைகளை பிரித்தறிந்து இது  எரிமலை சீற்றத்தை ஏற்படுத்தும் வாயுக்களின் நாற்றம் என்று உணர்ந்து தப்பித்து கொள்வது மட்டுமல்லாமல் மனிதனையும்  அந்த வாயில்லா ஜீவன்கள் எச்சரிக்கின்றது. மனிதன் இதையெல்லாம் உணராமல்த்தான்  நன்மை பயிர்க்(ற்)கும் காட்டு விலங்குகளை எல்லாம் அழித்துக் கொண்டிருக்கின்றான்.

📭 தீக்கோழி:  பயிர்களையும் குடியிருப்புகளையும் அச்சுறுத்தும் ஓநாய், புலி, சிறுத்தை, யானைகளை விரட்ட, காட்டு ராஜா சிங்கத்தை யாராவது வீடுகளில் வளர்க்க முடியுமா, அதற்கு பதிலாக  தீக்கோழிகளை வளர்த்துக் கொள்ளலாம் ஏனென்றால்,  தீக்கோழிகள்  எதிரிகளை துரத்த, மாற்று குரல் மன்னன் (மிமிக்கிரி) செய்வதில் பலே கில்லாடி,  தன்னுடைய குஞ்சுகளை ஊனுண்ணி விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள சிங்கம் போல் கர்ஜிக்கும்  அற்புத திறன் படைத்தது.


 Predators.jpg
sri rama jyam-2016.jpg