சனி, 3 டிசம்பர், 2016

-  பூமித் தாய்
பூமித் தாயே, சரணம் சரணம்

நான் உனக்கு சுமையாகி விடுவேனோ, என்று ஏளனத்துடன் என்னை பார்த்த போதெல்லாம் நான் உனக்காக ஒரு வேலை வைத்திருக்கின்றேன் என்றாய் அசரீதியாக, பூமித் தாயே, சரணம் சரணம்

உங்களுக்கான ஒரு அழகான வரலாறு உண்டு, அதை நீங்கள் திரும்பி பார்க்கும் போது, கடந்து வந்த பாதைகளில் பல சந்தோஷமான நாட்கள், சில சிரமங்கள்,  பல வெற்றிகரமான சாதனைகளை  நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள்.

குறுகிய மந்த எண்ணங்களை சுமந்து வந்த சுவையற்ற சில உறவுகள், முகத்துதி-நட்புகள் சில நேரம் உங்கள் மனதில் ஒரு குறுகிய தேடல், அற்பமான நினைவுகள், சாதிக்க முடியாத வெறுமை நிலை மற்றும் சகிக்க முடியாத  மன சோர்வை தந்திருந்தாலும், நீடிய பொறுமை, மன்னிக்கும் திறன், அந்த பரம்பொருளின் துணை தங்கள் நல்ல எண்ணங்களையும் இலட்சியங்களையும், கனவுகளையும் மூழ்கிவிடாத படி ஒரு முடிவற்ற நிலைக்கு இட்டு சென்றிருக்கின்றது.

இயற்கையின் கோட்பாடுகள் பல, இதில் மனிதன் அறிந்து கொண்டது ஒரு சில துளிகள் மட்டுமே, அனைத்து ஜீவராசிகளின் இறப்பு, வாழும் கால கணக்கெடுப்பு-சமநிலை சீரமைப்பு  இன்னுமொரு உயிரிடம் கொடுக்கப்பட்டிருக்கும்,

இதில் மனிதனுடைய சமநிலை சீரமைப்பு, இயற்கையின் சாரளத்தில் இன்னுமொரு மனிதனிடம் கொடுக்கப்பட்டிருப்பது இயற்கைக்கு எதிராக பார்க்கப்படுகின்றது (...)  இவன் யார் என்னை கொல்வதற்கு இவனும் என்னைப்போல் ஒரு மனிதன் தானே, என்னுடைய பாவ புண்ணிய கணக்கை அந்த பரம்பொருள்  பார்த்துக் கொள்ளட்டும் என்கின்றது இந்து மத தர்மம்.
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்துலக குழந்தைகளின்  நினைவுகூர்  அஞ்சலி ……. பூமித் தாயே, சரணம் சரணம்

சீனாவின் அவமானம் - 2016 குழந்தைகள் தூக்கிலிடப்படும் ஆவணப்படம் இது

பெய்ஜிங் வெளியே, சன் கிராமத்தில் அமைந்துள்ள குழந்தைகள் அனாதை விடுதியில் 150 க்கும் (வடிகட்டப்பட்ட எண்ணிக்கை) மேற்பட்ட  குழந்தைகள் மரண தண்டனை குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டு, இங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் ( ... ) இந்த ஆவணப்பட வீடியோவுக்கான கருத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலகத்தை பற்றிய உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக