சனி, 16 செப்டம்பர், 2017

ஜெர்மனி, பாராளுமன்ற தேர்தல் 2017, செப்டம்பர் 24 ல்  நடைபெற உள்ளது. இனிமையான வணக்கங்கள் அனைவருக்கும். ஐரோப்பாவின்  தலைமை நாற்காலியின் மிக முக்கியமான இரும்புக் காலாக ஜெர்மனி விளங்குகின்றது. மேலும்  மற்றய ஐரோப்பா நாடுகள் ஜெர்மனியின் தலைமையுடன் ஒரு நல்லுறவு மற்றும் நல்ல, தார்மீக ஒருமைப்பாடுகள், எதிர்கால ஐரோப்பாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் என்பதில் ஜெர்மன் மக்கள் மட்டுமல்ல  ஐரோப்பா மக்களும் மிக தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

அகதிகளுக்கான நல்லிணக்க வரவேற்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் உள் நாட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உணவு உற்பத்தி கண்காணிப்பு,  இந்த பூமிப் பந்தில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், மிக மோசமான போர்க் குற்றங்கள் நடைபெறும் நாடுகளுக்கு எதிராக படையெடுப்பு, அகதிகள் பாதுகாப்பு   மற்றும் இன அழிப்பு, சித்திரவதை, மிருகவதை தடுப்பு செய்யக்கூடிய ஒரு தைரியமான  அரசு அமைந்தால் போதும் என்பது என்னுடைய கருத்து.

மதிப்பீடு ஓய்வூதியம், வேலை இழந்தோர்களுக்கான சமூகநல உதவிகள் மற்றும் தரம் உள்ள உணவு, மருந்து மருத்துவம்  இளைய தலைமுறையினருக்கான தொழிற்கல்வி வேலைவாய்ப்புக்கள் மேலும் பெருமளவில் அகதிகளின் வருகையை தடுக்கும் நடவடிக்கைகள் பொதுவாக  ஜெர்மன் மக்களினால் வைக்கப்படும் கோரிக்கைகள்.  

தற்போது இருக்கும் அதிபர், திருமதி அங்கேலா-மேர்க்கெல்  சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக்,  ஆப்பிரிக்கா அகதிகள் விடையத்தில்   தவறு இழைத்து விட்டார் என்று பொதுவாக  ஐரோப்பா மக்களினால் பேசப்பட்டு வந்தாலும் அவங்க, அன்றிருந்த அரசியல் நெருக்கடிகளை ஓரம்கட்டி விட்டு,  

பசி பட்டினி என்று அவதியுறும் சிரியா நாட்டு மழலைகள், குழந்தைகள் பெண்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று இளகிய மனசு, தன்  கருணை உள்ளத்திலிருந்து முடிவுகளை எடுத்தார். அவர் முன்னெடுத்த அகதிகள் வரவேற்ப்பு கலாச்சாரம் பின்னால், ஐரோப்பா மக்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது மட்டுமல்லாமல்  அது  ஒரு  போதும் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு இடைஞ்சலாக வராது  என்பது என்னுடைய ஒரு கருத்துக்கனிப்பு.     

SPD அதிபர் வேட்பாளர் மார்டின் ஷூல்ஸ்,  அவர்களின் அரசியல் வாழ்க்கை பற்றி எனக்கு சரியாக தெரியாது இருந்தாலும், அவர்களும்  மிகத் திறமையான அரசியல்வாதி என்பதில் எந்த மாற்றுக்கருத்தும்  இல்லை,  அதிபர், திருமதி அங்கேலா-மேர்க்கெல்  (CDU) இவர்களில் யார் ஆட்சியை பிடித்தாலும் ஜெர்மனி, ஐரோப்பாவின் இறையான்மைக்கு எந்த விதமான பங்கமும் ஏற்படாது,

இனிமேல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்புக்கள் எந்த கட்சிக்கும்  கிடைக்காது என்பது நிதர்சனமான ஒரு உண்மை. 70 ஆண்டு கால ஜெர்மனியின் நல்லாட்சி அரசியல் வாழ்க்கை புதையுண்டு போகாமல் பாதுகாக்கப்பட்டு, அடுத்த தலை முறையினருக்கு எடுத்து செல்லப்பட வேண்டும், அதற்கு பலம் வாய்ந்த ஒரு எதிர்க் கட்சி அமைய  வேண்டும் என்பது என்னுடைய சின்ன விண்ணப்பமாக இருக்கின்றது  நன்றி என்றும் அன்புடன்

Unbenannt - 1.jpg


2016-17 சிறப்பு-பார்வை
இந்த கலியுகத்தில்          
இந்த கலியுகத்தில் ❤❤             
இந்த கலியுகத்தில் ❤❤❤
பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   ......
sri rama jyam-2016.jpg

புதன், 6 செப்டம்பர், 2017

🐂மரபுவழித் தமிழர் கல்வி, வேளாண்மை தான்

நல்ல கல்வி மட்டுமல்ல, நல்ல உணவு தண்ணீர்,  நல் ஆரோக்கியத்தை உறுதியாக்கும் முற்காப்பு மருந்து மருத்துவம், சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட வாழ்விடங்கள் மற்றும் நல்ல வேலை வாய்ப்புக்கள் எல்லாம் பெரும்  வசதி படைத்த மக்களால் மட்டும் தான் தொட்டுப்பார்க்க முடியும்.  ஏழை எளிய   நடுத்தர மக்களினால் அதை அண்ணாந்து கூட  பார்க்க முடியாது அவ்வளவு உயரத்தில் இருக்கும்

இந்த ஏற்றங்களுக்காக போராடி முற்றிலும் தோல்வியுற்ற வறிய  எளிய மக்களுக்கு கிடைத்த  மிகப் பெரிய ஆயுதம்  வேளாண்மை  இந்த ஏற்றம் உங்கள் கைகளில் இருக்கும் மட்டும் உங்களை யாரும் மண்டி போட வைக்க முடியாது.  நாளைய உலகம்  ஒரு  பிடி அரிசிக்காக உங்கள் கால்களில் மண்டியிட்டு காக்கும்  காலம் வெகு தொலைவில் இல்லை,

வேளாண்மை  மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் அற்புதமான ஒரு கருவி, நல்ல சமையல்காரன் அரை மருத்துவன் அந்த சமையலுக்கு தேவையான நல்ல காய்கறிகளை சாகுபடி செய்யும் உழவன் முழு மருத்துவன்.   

என்னுடைய நாட்டில் 1977-78 ல்,  தேர்தல் மற்றும்  சட்ட, கல்வி மற்றும் மருத்துவ மேல் நிலை பள்ளி படிப்புகளை  விகிதாசார அடிப்படையில் ( இன/மொழி ரீதியான) ஒதுக்கீடு செய்தது அன்றய அரசு,  நல்ல மதிப்பீடுகள் பெற்ற பல தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை  தொடர முடியாத  இக்கட்டான ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.

இதன் விளைவு யாழ்பாணத்தில் நல்ல தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் உருவானது, இதை பொறுத்துக் கொள்ளாத  அன்றய அரசு (....) மாணவர்கள் புரட்சிக்கு/யுத்தத்திற்கான களபலி  கொடுக்கப்பட்டது பின்னால் நடந்தவைகள்  அனைத்தும் உங்களுக்கு தெரியும். அதற்குள் நான் போக விரும்பவில்லை.

ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் கனணி, மருத்துவம் போன்ற பல துறைகளிலும் மற்றும்  மூன்று நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்று நல்ல அறிவுள்ள ஒரு சமூகமாக இன்று வளர்ந்து உயர்ந்து நிற்கின்றது, ஈழத் தமிழர்களின் அழிவு ஒரு சாபமாக இருந்தாலும்  இயற்கை அதை வரமாக மாற்றித் தந்திருப்பது  புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றுதான் சொல்வேன்.

இன்றய உலகின் சுமார் 15,000 தக்காளி வகைகள் உள்ளன  இதில் பெரும் எண்ணிக்கையிலான தக்காளி செடிகள் புது வகை பயிராக மனிதர்க http://mahesva.blogspot.de/2017/08/15000.html  இதைப்பற்றி அறிந்து கொள்ள இதில் கிளிக் செய்யவும்


Stickstoffs.jpgPhotosynthese.jpg
பரப்பிரமம் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.
பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   ......

sri rama jyam-2016.jpg

சனி, 26 ஆகஸ்ட், 2017

   -  ஜனநாயகத்தின் அஸ்தமனம்

இன்னுமா அரசியலை  நம்பிக் கொண்டிருக்கின்றீர்கள், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். யாராவது அரசியல், அரசியல்வாதிகளை  பற்றி குறை கூறினால் அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும்.

அவர் செய்வார் இவர் செய்வார்  என்று நம்பிக் கொண்டு இருக்காதே..! அவர்கள் இன்னுமொருவருக்காக அரசியல் செய்கின்றார்கள்இது உனக்காக கொடுக்கப்பட்ட கால இடைவேளை, உன்னால் முடிந்தால்உன்னை நீ காப்பாற்றிக் கொள்..  

❤❤ உங்களுக்கு எனது அழகான  வணக்கங்கள்


"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்"

ஒரு ஜனநாயக நாட்டில் தொடர்ந்து பல முறை ஒரு கட்சி/இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தால், அந்தக் கட்சிகள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகளை எல்லாம் மறைப்பார்கள், சட்டத்தையும், மக்களையும் மதிக்கமாட்டார்கள்.

இவர்களை புலனாய்வு துறை  கூட விசாரனை செய்ய முடியாது. இதற்கு ஒரே வழி இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் புதிய ஆட்சி மலர வேண்டும்.

பொதுவான ஒரு பாராளுமன்ற பார்வை: (இழுபறி, குடுமி சண்டை, உள்பூசல், திருட்டு உறவு, ஊழல், கறுப்புபணம், நீயா நானா போட்டி, பூனை சண்டைகள் அவர்களின் போக்கில் விட்டு விடுங்கள் என்னதான் நடக்குது பார்ப்போம்

மனித ஆட்சி, மனித எண்ணங்கள் இனி மேல் செல்லாது, இனி வரும் காலங்களில் நடப்பவை யாவும், அந்த பரம்பொருளின் விருப்பங்கள். இந்த  துன்பங்களிலிருந்து விடுபட, பரப்பிரமத்தின்  ஆட்சி மலரட்டும்.   ......

மனித இனத்தின் வளர்ச்சி - 2017 ல் மக்கள் தொகை 7,5 பில்லியன்,  2080-90 ல் மக்கள் தொகை 3,5 பில்லியன்

இந்த மக்கள் ஸ்மார்ட் சிட்டிகளில் மட்டும்  வசிப்பார்கள். மற்றய இடங்கள் எல்லாம் இயற்கைக்காக விட்டு கொடுக்கப்படும்.

கழுத்தை இறுக்கும் மூன்று சுருக்கு கயிறுகள்
 உணவு தண்ணீர் மற்றும் மருந்து பற்றாக்குறை காரணமாக நிரம்பி வழியும் மக்கள் தொகை தானாகவே சுருங்கி விடும்.     
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்