❤❤ டொனால்டு டிரம்ப் க்கு முன்னால், இருந்த உலகம்
சில நேரங்களில் நான் சிந்திப்பதுண்டு, இணைய தளங்களில் கொட்டிக்கிடக்கும் கருத்துரைகளைப் பற்றி அவைகள் மிக குறைந்தளவு அறிவுப்பூர்வமானவைகள் என்று. டொனால்டு டிரம்ப் க்கு முன்னால் இந்த உலகம் சண்டை சச்சரவு இல்லாத சமாதானம் நிறைந்த பூமியாக இருந்ததாக, ஒரு ஒப்பனை, ஆனால் நிஜ அரசியல் அரங்கம்,
எப்படி இருந்ததென்று ஒரு சில அரசியல் ஆராய்ச்சி நிபுணர்களுக்கு நன்றாகவே தெரியும், எத்தனை சண்டைகள், உயிரிழப்புக்கள், எத்தனை கோடி மக்கள் அகதிகளானார்கள் மேலும் சுற்றுச்சூழல் மாசுபடுதல், நிதி ஆவணங்களி மோசடிகள், தேசியவாத சிதைவுகள், வீணடிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய யோசனைகள், முதலாளித்துவம், சூறையாடப்படும் சமூக ஜனநாயக நெறிமுறைகள், இவை அத்துனையும் நிஜமான ஒரு அசல் அரசியல் பின் புல பார்வைகள் என்று சொன்னால் யாராலும் மறுத்துரைக்க முடியாது,
அவர் மேல் சுமத்தப்படும் ஒரு சில குற்றச்சாட்டுகள்
- மெக்ஸிக்கோ எல்லைச் சுவர்
- உலகமயமாக்கல் எதிரானவர்.
- சட்ட விரோத குடியேற்றத்திற்கு எதிரானவர்.
- அகதிகளுக்கு எதிரானவர்.
- அரசியல் அறியாதவர்
பொய்களை கூறி அரசியல் நடத்துகிறவர்கள் மத்தியில், தன்னுடைய சொந்த நாட்டை காப்பாற்ற நினைப்பது குற்றமா ?
அமெரிக்கா ஜனாதிபதி பதவி ஒன்றும் தனிமனித, ஒற்றைக்-குடை ராஜ்யம் கிடையாது. பெரும்பான்மை பிரதிநிதிகள், செனட் மன்றத்தின் அனுசரிப்பதை பொறுத்து சட்டங்கள் இயற்றப்படும்.
ஜனாதிபதி பதவி ஏற்பதற்கு முன்னாலே பலர் கற்பனை சட்ட, எதிரிகளுடன் போராடி, அடிதடி, சண்டை, வாக்கு வாதங்கள் செய்து இல்லாத வயலுக்கும், வாங்காத மாட்டுக்கும் முட்டி மோதும் பகுத்தறிவு மேதைகளின் வெட்டிப் பேச்சு முகம் சுழிக்க வைக்கின்றது, புலி அடிச்சு இறந்தவர்களை விட, கிலி அடிச்சு நோய் வாய்ப்பட்டு இறந்தவர்கள் தான் அதிகம் பேர்,
எனது கிணற்றை காணவில்லை, அதை கண்டுபிடித்து தாருங்கள் என்று காவல்துறையில் (...) இல்லாத கிணற்றை தேடும் அதிகாரிகள் போல் அமெரிக்கா-மெக்ஸிக்கோ மேற்க்கு, சான் டியாகோ (கலிபோர்னியா) நகரங்கள் மற்றும் தரிசாக்கி, பாலைவனத்தின் இடையே உள்ள எல்லைப்பகுதியில், 3144 கிமீ நீளமுள்ள சுவர் முள்வேலிகள் 18 ஆம் நூற்றான்டின் பிற்பகுதிகளில் இருந்தே இருக்கின்றது,
ஏற்கனவே இருக்கின்ற ஒரு விடையத்தை ஒன்றும் புதிதாக கட்ட வேண்டிய அவசியம் கிடையாது, வேண்டுமென்றால் இடை இடையே செருகி புதுப்பித்து கட்டலாம். திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி சிலர் அதையே நினைத்து முழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
உலகமயமாக்கல் சீரழிவுகளை சற்று, வறிய நாடுகளை எட்டிப் பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள், விவசாய நிலம், மீன் வளமுள்ள கடலோர பகுதிகளை எல்லாம் பன்நாட்டு நிருவனங்களுக்கு தாரை வார்த்து விட்டு, மீன்களை திரும்ப இறக்குமதி செய்யும் அவலங்களை, (...)
பன்நாட்டு கம்பனிகளில் வேலை செய்பவர்கள் குறைந்த ஊதியம், நீண்ட நேர உழைப்பு , பாதுகாப்பு இல்லாத பணி இடங்கள், சொந்த மண்ணின் வாழ்வாதாரங்களை மாசுபடுத்தும் கழிவு நீர், குப்பை, இது போன்ற துன்பங்களிலிருந்து விடுதலை,
அமெரிக்கா, உலகத்திலுள்ள தன்னுடைய நிருவனங்களை திரும்பப் பெறும், இதன் காரணமாக வேலை இழப்போர் கவலைப்படுவதில் ஒரு அர்த்தமுண்டு, இதற்கெல்லாம் காத்திருக்கும் காலம் மிக நீண்டது அதற்குள் இந்த உலகம் மாற்று வழிகளில் பயணம் செய்ய தொடங்கி விடும்,
அமெரிக்காவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாரிய திருப்பம் மேலும் தங்களுடைய பாதுகாப்பு குறித்து சலிப்படைந்த ஐரோப்பா, பதட்டமான நாடுகளில் நிலை நிறுத்திய படைகளை மறு-சீரமைப்பு, முன்னெச்சரிக்கை, பொருளாதார காரணங்களினால் அமெரிக்கா திரும்பப் பெறும் கட்டாயம் இருப்பதில் ஆச்சரியப்படத் தேவையில்லை,
அநேகமாக அமைவதற்கு வாய்ப்புகள் இருப்பின், இராணுவ சமநிலையின்மைக்கு வழிவகுக்கும் என்ற ஒரு பரபரப்பான தகவலையும் சொல்லி, இதுவொரு நிஜ முகங்களின் பிரதி அறைகூவல்,
போராட்டங்கள் நடத்தி, காயம்பட்டவர்களை விட கார் டயர்கள் எரித்து அதில் வரும் நச்சு வாயு தாக்கி அவதிப்படுபவர்கள் தான் அதிகம் பேர் (ஒரு கார் டயர் எரித்தால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட, விஷ நானோ துகள்களை வெளியேற்றும்) செவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி, பதிக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இன்னும் சிறுபிள்ளைத்தனமான விரத்திப் பேச்சு எதற்கு,
மனிதன் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கின்றான், எங்கள் பூமிக்கு இயற்கை: கடல், காடு, விலங்குகள் என்று இன்னுமொரு பக்கமும் இருக்கின்றது,
உங்கள் மனதில் தோன்றும் எதிர்மறையான எண்ணங்கள், ஒரு போதும் நேர்மறையான ஒரு வாழ்க்கையை உங்களுக்கு கொடுக்காது, மகேஷ்-இரவி .... நன்றி என்றும் அன்புடன்
அமெரிக்கா - 45 ஜனாதிபதி "டொனால்டு டிரம்ப் " (பிறந்த: ஜூன் 14, 1946 (வயது 70), குயின்ஸ் )
மூன்று துணைவர்கள்: "முதல் பெண்மணி" மெலானியாவோ டிரம்ப் ( 2005) , மார்லா மேப்ல்ஸ்ஐ (1993-1999) , இவானா டிரம்ப் (1977 ல் இருந்து 1992 திருமண வாழ்க்கை)
பிள்ளைகள்:
டொனால்டு டிரம்ப் ஜூனியர்
எரிக்-டிரம்ப்
இவன்கா-டிரம்ப்
ஸ்ரெப்பானி-டிரம்ப்
பேர்ன்-டிரம்ப்
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின். - திருக்குறள் தந்த திருவள்ளுவர்
ஃ ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம் ஃ


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக