திங்கள், 31 அக்டோபர், 2016

ஹாலோவீன் ஆனந்தம் ஆனந்தம் மகிழ்ச்சி!

நாம் எல்லோருமே  வேடிக்கை விரும்பிகள் தான்.  சிரிப்பு, நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல்  எங்கள் வாழ்க்கை ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத பாசம், அதீதம் இல்லாத அன்பு மற்றும்  நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் இணைந்து தெளிவான, வெளிப்படையான ஒரு இயல்பான  வாழ்க்கை வாழும் விரும்பிகள் தான்.

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் பேய்கள், ஆவிகள் மற்றும் வேற்றுகிரகவாசிகள், அரக்கர்களையும்  இணைத்துக் கொள்ளும் ஒரு பயங்கரமான விளையாட்டுத்தான்  "ஹாலோவீன்" .

அக்டோபர் 31, நவம்பர் 1 இன்று, அனைத்து புனிதர்களின் ஆத்மா பெருவிழா "ஆவிகளின் திருநாள்"  அன்று இரவு நேரத்தில் கொண்டாடப்படுகின்ற,  சிறு பிள்ளைகளுக்கான ஒரு வேடிக்கை நிகழ்ச்சி தான் இது.

முதலில் இதனுடைய பாரம்பரியம்  அயர்லாந்து கத்தோலிக்க நாட்டுப்புற மக்களினால் கொண்டாடப்பட்டு இருக்கின்றது, 1830 பிறகு ஐரிஷ் கத்தோலிக்க மக்கள் அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர்  நினைவாக அவர்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றான 

இந்த "ஆவிகளின் திருநாள்"   பராமரிக்கப்படும் வகையில்  அவர்களின் வீடுகளில் ஆவிகளின் உருவப் பொம்மைகளை வைத்து தீபங்கள் ஏற்றி கொண்டாடினார்கள் என்பது ஒரு கடந்த கால செவிவழி தகவல். இதற்கெல்லாம் ஆதாரங்களை தேடி அலைய வேண்டியதில்லை.

ஐரிஷ் மக்களின் பாரம்பரியம் இன்று ஒரு மத சார்பற்ற வேடிக்கை நிகழ்வாக வெளிநாடுகளில் சிறுவர்களின் திருவிழாவாக மறுமலர்ச்சி பெற்றுள்ளது.

சிறுவர்கள் பேய்கள் மற்றும் அரக்கர்கள், பயங்கரமான  முகமூடி, உடைகள், முகப்பூச்சு அலங்கரிப்பு செய்து, இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று பெரியவர்களை பயம் காட்டி இனிப்புகள் சேகரிக்கும் ஒரு விநோத உடை நிகழ்ச்சி தான்  "ஹாலோவீன் வேடிக்கை"

குழந்தைகள் இந்த நாளில்  உங்கள் இல்லம் தேடி வருவார்கள் இனிப்புகள் வழங்கி அவர்களை சந்தோஷமாக துள்ளிக் குதிக்க வைத்து, மகிழ்ச்சியில் மலரும் அந்த ஆனந்த சிரி்ப்பை பரிசாக பெற்றுக் கொள்ளுங்கள்  என்றும் அன்புடன்  ....  மகேஷ்-இரவி


ஞாயிறு, 2 அக்டோபர், 2016








Butterfly Herzfrequenz.jpg






மனிதனுடைய இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு  எத்தனை தடவைகள் ?

- பேபி/மழலைகள் 130  தடவைகள்/ஒரு நிமிடம்
- குழந்தைகள் 100  தடவைகள்/ஒரு நிமிடம்
- வயது வந்தவர்கள் 60-70  தடவைகள்/ஒரு நிமிடம
- 80/முதிர் வயது 50-100  தடவைகள்/ஒரு நிமிடம
- காதலர்களின் இதயத்துடிப்பு ❤❤

❤❤ பட்டாம்பூச்சிகளின் இதயத் துடிப்பு ஒரு நிமிடம் எத்தனை தடவைகள் ?
சக ஜீவராசிகள்/விலங்குகளின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு
தேன் குருவி
600-1200
தடவைகள்/ஒரு நிமிடம்
வேறு சில பறவைகள்
800
தடவைகள்/ஒரு நிமிடம்
எலி
450-500
தடவைகள்/ஒரு நிமிடம்
கலைமான் வண்டு
378
தடவைகள்/ஒரு நிமிடம்
கோழி
330-375
தடவைகள்/ஒரு நிமிடம்
 வாத்து
229-420
தடவைகள்/ஒரு நிமிடம்
 பாம்பு   
180
தடவைகள்/ஒரு நிமிடம்
 புறா  
150-250
தடவைகள்/ஒரு நிமிடம்
இறால்
 146
தடவைகள்/ஒரு நிமிடம்
 சிலந்தி
130-134
தடவைகள்/ஒரு நிமிடம்
பூனை  
130
தடவைகள்/ஒரு நிமிடம்
நுளம்பு / கொசு
110
தடவைகள்/ஒரு நிமிடம்
நரி   
100-125
தடவைகள்/ஒரு நிமிடம்
செல்லப்பிராணி/நாய்
60-180
தடவைகள்/ஒரு நிமிடம்
மனிதன்  
60-70
தடவைகள்/ஒரு நிமிடம்
கரப்பான் பூச்சி
60-80
தடவைகள்/ஒரு நிமிடம்
ஆடு    
60-80
தடவைகள்/ஒரு நிமிடம்
பன்றி  
 60-80
தடவைகள்/ஒரு நிமிடம்


தும்பி
60  
தடவைகள்/ஒரு நிமிடம்
சிங்கம்
40
தடவைகள்/ஒரு நிமிடம்
குதிரை
32-44
தடவைகள்/ஒரு நிமிடம்
 பசு   
45-50
தடவைகள்/ஒரு நிமிடம்
தவளை
37
தடவைகள்/ஒரு நிமிடம்
யானை  
22-28
தடவைகள்/ஒரு நிமிடம்
நத்தை
26
தடவைகள்/ஒரு நிமிடம்
சாணம்/தென்னை வண்டு
16
தடவைகள்/ஒரு நிமிடம்
திமிங்கிலம்  
15-16  
தடவைகள்/ஒரு நிமிடம்


நீல திமிங்கிலம்   
6
தடவைகள்/ஒரு நிமிடம்


Unbenannt - 2.jpg

தனிச் சுதந்திரம்
உயிரினங்களின் ஆரம்ப தரணி-தத்துவம் இறையாட்சிக்கு உட்படுத்தப்பட்டு, பல கோடி ஆண்டுகளாக பல்லாயிரக் கணக்கான ஜீவராசிகள் சுதந்திரமான தலைமைத்துவத்தின் கீழ் மகிழ்ந்திருந்த காலம் அது

மனிதனின்  வருகை இந்த பிரபஞ்ச பிரமச்சாரிய இராச்சியத்தை  தேவர்களுக்கு - இந்திரர்களுக்கு  முன்மொழியப்பட்டு மனித வாழ்க்கை மேலும் சிறந்து விளங்க தேவர்களினால் குடும்பம், விவசாயம், மொழி, மருத்துவம், இயல், இசை, நாடகம், விஞ்ஞானம் என அறிமுகம் செய்யப்பட்டு மனித வாழ்க்கை நவநாகரீகம் அடைந்து வந்த இந்த காலப் பகுதியில் தான் மதங்கள் உருவானது.

காலப் போக்கில் இந்திரர்கள் செய்த தவறுகள், மனிட பெண்கள் மீது கொண்ட மோகம் காரணமாக  மனிடர்களின் முறையீடு/பிராத்தனைகளின் பலாபலன்கள் இந்திர தேவ ராஜ்யம் பறிக்கப்பட்டு,

இறையருள் பெற்ற புவி மன்னர்களிடம் அரசாட்சி பகிர்ந்து வழங்கப்பட்டது  இந்த மன்னர்களின் அரசாட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள் என நம்முடைய இதிகாசங்கள் சொல்கின்றது.

எங்களுடைய முன்னோர்களின் சமகாலங்களில் வாழ்ந்த  மனித மன்னர்களின் அரசாட்சி, மனித அடிமை, அடக்கு முறைகள் காரணமாக, திரும்பவும் அரசாட்சி பறிக்கப்பட்டு தற்காலியமாக ஜாம்பவான்களிடம் ஜனாதிபதி / பிரதம மந்திரிகள் கைகளுக்கு மாற்றப்பட்டது

ஆரம்ப காலங்களில் இவர்களின் சர்வாதிகாரப் போக்குகளினால் முதல்-இரண்டாம் உலக போர்களில் பாலிடிக்ஸ் என்கவுண்டர் மூலம், திரும்பவும் அரசாட்சி  பறிக்கப்பட்டு, இன்று குறைந்த பட்சம் குறைபாடற்ற ஜனநாயகவாதிகள் ஆட்சி செய்யும் ஒரு பொற்காலத்தில் வாழ்ந்து கொண்டி இருக்கின்றோம்.

அடிமைகளின் விலங்குகள் உடைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டது.  மத, இன அடக்கு முறைகளும் சட்டங்கள் மூலம் ஒழிக்கப்பட்டு  நீண்ட காலங்களை கடந்து விட்ட நிலையிலும் (…)

உங்கள் விருப்பம் போல் வாழக் கூடிய ஒரு வசந்தமான பொற் காலங்களில் வாழ்ந்து கொண்டு, திரும்பவும் ஒடுக்கப்பட்ட ஒரு கலாச்சார வட்டத்திற்குள் வாழும் அடிமைத்தனம் எதற்கு?

இன்று நடை முறையில் இருக்கும் இந்த ஜனநாயக ஆட்சியும் ஒரு காலத்தில் மாற்றமடையக் கூடியது

மதங்களை குறை சொல்வதை விடுத்து, ஒடுக்கப்படும்  கலாச்சாரம், அடக்கு முறையுள்ள இன, மதங்களில்  நீங்கள் வாழ்வதை விட,  அதை விட்டு விலகுவதுதான் தனிச் சுதந்திரமானது. மற்றவர்கள் போட்ட வட்டத்திற்குள் அடங்கி வாழ்வதை விட, உனக்கு பிடித்த  தனிச் சுதந்திரமான வட்டத்தை நீயே அமைத்துக் கொள்,

இது தான் சுதந்திரம், இது தான் தனி மனித விடுதலை,  இது உனக்கு கிடைத்த ஒரு குறுகிய பொற்காலம் இதை மாற்றி அமைத்து  சுதந்திரமாக வாழ்வது உன் கைகளில் த்தான் இருக்கின்றது  சீக்கிரமாக மாற்றிக் கொள்! இன்று போனால் நாளை கிடைக்காது,  மகேஷ்-இரவி .... நன்றி என்றும் அன்புடன்

ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்

Foto