செவ்வாய், 15 நவம்பர், 2016

❤❤ அமெரிக்கா & ரஷ்யா நடைமுறைவாத, ஒத்துழைப்புக்கள்
"உங்கள் மனதில் தோன்றும் எதிர்மறையான எண்ணங்கள்,  ஒரு போதும் நேர்மறையான ஒரு வாழ்க்கையை உங்களுக்கு கொடுக்காது"

ரஷ்யா ஒரு வலுவான நாடு, அந்த நாட்டு மக்கள் ஒன்றும் உலக சமாதானத்திற்கு எதிரானவர்கள் கிடையாது, இந்த உலகத்தில் வாழும் 99 விழுக்காடு மக்கள் யுத்தங்களுக்கு எதிரானவர்கள், எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி சண்டை உயிரிழப்புக்கள் என்றால் கலங்க வைத்து அச்சுறுத்தும் ஒரு செய்திதான். ரஷ்யா மக்களின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு, சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்து போராட வழிவகுக்கும் என்பதை, முன்னோக்கு கண்ணோட்டத்தில் உறிதியாக சொல்ல முடியும்.

எதிர்கால அமெரிக்கா ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப், ரஷியா ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இரு தரப்பு உறவு, ஒத்துழைப்புக்கள், கடந்த காலங்களில் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட சிரியாவில் அசாத் ஆதரவு மற்றும் ரஷ்யா கிரிமியன் குடாநாட்டின்  பின்னணி மற்றும் கிழக்கு உக்ரேனில் உள்ள பிரிவினைவாத போராளிகளு க்கான ரஷியாவின் ஆதரவுப் போக்கு, மேலும் உக்ரைன் சர்ச்சை, தன்னிச்சையான வெளியுறவு கொள்கையிலிருந்து  ஒரு ஆக்கபூர்வமான, பரஸ்பர நன்மைகளுக்கு வழிவகை செய்யும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.

சீரழிந்து போகும், புலம்பெயர்ந்த சமூகங்கள், ஒரு சமூகம் தன்னுடைய அடையாளங்களை இழப்பதற்கு முன்னால், அந்த சந்ததிகள் மூலம் கிடைக்கக் கூடிய ஒரு மரபு அடையாளமும் சிதைந்து காணாமல் போகும், புத்திஜீவிகள் ஒதுங்கி கொள்வார்கள், இது அந்த சமூகத்தின் விடுதலையை நீண்ட தூரமாக பயணப்பட செய்து விடும்.

இரு நாடுகளின் ஒத்துழைப்புக்கள் சிரியா சண்டையில் ஒரு திருப்பு முனையாக அமையும் வேளையில் இங்ஙனம், அவர்களின்  சமூகம், அகதி முகாம்களில் ஊட்டச்சத்தின்மையினால் ஊனம் அடைந்து சீரழிந்து, தங்களது அடையாளங்களை இழப்பதற்கு முன்னதாகவே விடுதலை அடைய வேண்டும்,  பழிக்குப் பழி வாங்கும் எண்ணங்களை மறந்து (....)  

பகுத்தறிவுக்கு மாறாக இயற்றிய, யுத்தம் என்னும் சொல்லை, ஆழக் குழி தோண்டி புதைத்திடுவோம்”

இயற்கையும், மனிதனும் சமாதானத்துடன் கூடி வாழ எந்த எல்லை கோடுகளும் இல்லாத புதியதொரு  உலகை எங்கள் காலத்திலே, மலர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் .....   நன்றி என்றும் அன்புடன்  •┈┈┈┈•✿❁✿•┈┈┈┈•

ஸ்ரீ ராம ஜெயம்  ஸ்ரீ ராம ஜெயம் அனுமன் இருக்கையில் ஏது பயம்  








<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக