அல்சைமர் நோய்
ஜெர்மன் மனநல மருத்துவர் அலூஜி அல்சைமர் (14, 1864 - 1915) அல்சைமர் நோய் என்று அழைக்கப்படும் மனநிலைக்குலைவின் வடிவம், பற்றி அன்று முதலில் விவரித்த படியால் அவரின் பெயர் கொண்டு இந்த நோய் இன்றும் அழைக்கப்படுகின்றது.
அல்சைமர் நோய்க்கு முதுமை ஒரு பொதுவான காரணமாக சொல்லப்படுகின்றது. முதிர்வயது காலத்தில் சேதமடைந்த மூளை நரம்பு செல்கள் மற்றும் பீட்டா-அமைலோயிட்டு படிவுகள், சிதைவுறும் டாவ்ப் புரோட்டின்
இங்ஙனம் களி மண் கறைபடிந்த மூளையினால் சில கையிருப்புகளை மட்டுமே வரையறுக்க முடிகின்றது. குறிப்பாக சற்றுமுன் முகக் கண்ணாடியில் பார்த்த தன் உருவத்தை பார்த்து, வேற்று மனிதனைப் போல் சிரிப்பது, கை காட்டுவது போன்ற நிகழ்வுகளை சொல்லலாம்.
பீட்டா-அமைலோயிட்டு இதுவும் ஒரு முக்கியமான புரதம். டாவ்ப் புரதம் நரம்பு செல்களின் உள்ளே சிதைவுறுகின்றது ஆனால்,பீட்டா-அமைலோயிட்டு வெளி நரம்பு கடத்தி முடிச்சுகளில் படிந்து, நரம்பு மின் கடந்தி செய்திகளுக்கு இடையூறுகள் செய்து முடிவில் நரம்பு கடத்திகளின் அழிவுக்கும் காரணமாகி விடுகின்றது.
இவை இரண்டு புரதங்களும் நரம்பு கடத்திகளில் பணிபுரியும் மிக முக்கியமான புரதங்கள் இந்த இரண்டு புரதங்களும் ஏன் சிதைவுறுகின்றது என்பது மருத்துவத்திற்கும் விடை தெரியாது, பிறந்த மனிதன் இறக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி ஆனால், அவன் பூமியில் வாழ்ந்த இனிய நினைவுகளை நாட்குறிப்பிலிருந்து (மூளை) துடைத்தழிப்பது தான் அந்த பரப்பிரமத்தின் மகா இரகசியம்.
மனநிலைக்குலைவின் ஆரம்ப வடிவம்
எழுதுதல், படம் வரைதல் கைவினை பொருட்கள் செய்வதில் தடுமாற்றம் குழப்பம் ஏற்படும். மற்றும் சற்றுமுன், தொலைக்காட்சியில் சொன்ன செய்தியை நினைவில் பதியாமை.
- திசை அறியாமை.
- உடைந்த பேச்சுத்திறன்
- தன் முகவரி மறத்தல்.
- தவறாக நேரம் அறிதல் ( இரவு பகல் அறியாமை)
- பண எண்ணிக்கை. (தவறாக கணக்கு பார்த்தல்)
- (ஒன்றும் ஒன்றும் எத்தனை ? தெரியாது )
- ஆழுமை குலைப்பு.
- உறவுகளின் முகம் புரியாமை.
- தனித்தன்மை இழப்பு.
- சுய விபரம் அறியாமை மொத்தத்தில் கண்ணை கட்டி காட்டில் விட்ட
மாதிரி இருப்பார்கள்.
முதிர்வயது காலத்தில் வரும் ஞாபக மறதி நோய் எதிர்காலங்களில் அதிகரிக்கலாம் என்பது சில மனநல ஆய்வாளர்களின் கருத்து.
இதற்கான காரணங்கள்
நாள்பட்ட சர்க்கரை நோய் ( இன்சுலின் குறைபாடு) கொழுப்பு படிவு, வெளிப்பொருட்களின் படிவுகள் குறிப்பாக ஒப்பனை பொருட்களிலிருந்து உள்ளிழுக்கும் அலுமினியம், பிளாஸ்டிக், சிலிகான் மற்றும் உணவுகளிலிருந்து வரும் நச்சு ஏற்றம் மற்றும் மதுபோதை, மன விரத்தி, பயம். மண்டையில் அடிபடுதல் (நாள்பட்ட காயம்) மேலும்
வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மூளைக்கு கொடுக்கும் திடீர் ஓய்வு. மூளையை பயன் படுத்தாமை ( மன இடையூறு) இயங்கி கொண்டிருந்த இயந்திரத்தை நிறுத்தி வைத்தால் அது துரு பிடிக்கத்தான் செய்யும்.
மேலும் நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு (விற்றமின் டி ) ஒமேகா -3 மற்றும் ♂ டெஸ்டோஸ்டிரோன் ♀ ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் தட்டுப்பாடு
மருந்துகளின் தாக்கம், தண்ணீர், உணவு குறிப்பாக, அதிகமான மாட்டிறைச்சி நுகர்வு மற்றும் வாழ்க்கை தரம், பிற பொருட்களின் ஆக்கிரமிப்பு குறிப்பாக மயிர் சாயம், ஒப்பனை பொருட்கள்.
ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மூளை நரம்பு செல்களுக்கு ஊக்கமளிக்கும் மற்றும் புதிய நரம்பு செல்கள் உற்பத்திக்கு தேவையான கட்டுமான பொருள்.
விற்றமின் டி3 ஹார்மோன்களின் உற்பத்திக்கு தேவையான கட்டுமான பொருள்களின் முதன்மையானது இந்த விற்றமின் இல்லை என்றால் சகல ஹார்மோன் உற்பத்தியும் தடங்கல் ஏற்படும் அல்லது பாவிக்க முடியாத படி, ஒற்றை மிதியடி ஹார்மோனாக உற்பத்தியாகும்.
இயற்கை எதையெல்லாம் தாராளமாக வைத்திருக்கின்றதோ அவைகள் எல்லாம் உயிர் வாழ முக்கியமானது. உதாரணமாக: சூரிய ஒளி (விற்றமின் - டி) தண்ணீர் (ஐதரசன், தாதுக்கள்) மற்றும் உணவுகள், மாப்பொருள் (குளுக்கோசு)
ஆதி மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உணவை பகுத்து பார்க்கும் அறிவில்லாமையினால், அப்படியே மரங்களிலிருந்து பறித்து உண்ணும் படி, இயற்கை சகலத்தையும் அளவோடு அளந்து வைத்திருக்கின்றது.
சூரிய ஒளி கிடைக்காத பணியிடம் அளவிற்கு அதிகமான விற்றமின் மாத்திரைகளின் நுகர்வுகள். சத்து சத்து என்று உணவுகளை உள்ளே தள்ளுவது (வெள்ளரி பழத் தோட்டமும் நரியின் கதையை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் ) மனிதன் இந்த அளவுகளை எல்லாம் குலைத்தான் நோயாளி ஆனான்.
மாசுபடிந்த இன்றய உலகில் வாழ்க்கை தரம் ( உணவு, தண்ணீர், காற்று) என்பது, நலமற்று நலிவுற்று த்தான் கிடக்கின்றது ஒரு 50 விழுக்காடு கூட எந்த நாட்டவரும் நல்ல விதமாக சொல்ல முடியாது. இந்த இலட்சணத்தில் நோய்களுக்கு இது தான் காரணம் என்று ஒரு தனிக் காரணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது தவறானது.
மந்த எண்ணங்களை சுமந்து வந்த சுவையற்ற ஒரு வாழ்க்கை, சீர்குலைந்த உறவுகள் தந்த வலிகள், இனிய கனவுகளின் இடைமறிப்பு அளித்த வேதனைகள் போன்ற உளவியல் காரணங்களையும் இணைத்து தான் நோய்களுக்கான மருத்துவத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கின்றது, சாதாரண தலையிடி கூட, காரண காரியங்கள் ஏதுமின்றி, வெறும் உளவியல் காரணங்களினால் மட்டுமே பெரும்பாலும் வருகின்றது என்பது தான் அறிவுப்பூர்வமான உண்மை.
எவ்வளவு தூரம் மாசுபடிந்த உலகத்தின் தொடர்புகளை ஏற்படுத்தி வைத்துக் கொண்டிருக்கின்றீர்களோ அவ்வளவு சீக்கிரத்தில் மனநிலை குலைவு வந்து விடும். இந்த நோய்க்கு வயது வரம்புகள் ஏதும் கிடையாது இளைமையிலும் இதனுடைய பாதிப்புகளை உணரமுடியும். மன இறுக்கம் தொடர்ந்து படிக்க
❤❤தேங்காய் எண்ணைய்
அல்சைமர் நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் தேங்காய் எண்ணெய் ஒரு அற்புதமான மருந்து. தேங்காய், எண்ணைய், மற்றும் தேங்காய் உணவு பண்டங்களை உணவில் சேர்ப்பது.
- மன இறுக்கம். மன அழுத்த கோளாறுகளிலிருந்து வெளியேற உதவுகின்றது.
- தேங்காய் பால் விஷ முறிவு. நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றது.
- வயிற்று புண், வலி,நோவு, எரிச்சல் மற்றும் உடல் சூட்டை தனிக்க உதவுகின்றது.
- தைராய்டு சுரப்பி, கல்லீரல் இயக்கங்களை ஒழுங்கு படுத்துகின்றது.
- நோய்கிருமிகளின் எதிரி, கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது.
- அந்தரங்க நோய்கள் மற்றும் எச் ஐ வி போன்ற பால்வினை நோய்கள் தொற்றாமல் இருக்க மிகச் சிறந்த கிருமிநாசினி.
- புற்றுநோய், கட்டிகள் வருவதற்கு முன்னதாகவே தடுத்து விடுகின்றது மற்றும் உடல் எரியூட்டல் தடுப்பானாக தேங்காய் எண்ணைய் மருத்துவ வினையூக்கப்படுத்தும் என்பது அறிவியல் உண்மை.
தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த மூளை உணவு என்பதை தமிழர்கள் நீண்ட காலமாக அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பது பெருமைதான்.
மிகவும் அருமையான உணவு தேங்காய் எண்ணைய் (சூப்பர்ஃபுட்)
உங்கள் அழகும் ஆரோக்கியமும் பெருகும், 10 வாரங்கள் தேங்காய் எண்ணையை உடலில் தடவி குளித்து வந்தால், நீங்கள் பத்து வயது இளமையாக இருப்பதை உங்களால் பார்க்க முடியும் மற்றும் உணவிலும் சேர்த்துக் கொண்டால்
உடல் செல்களில் தேங்கி நின்ற நச்சுக்கள் வெளியேற்றி திசுக்களை தூய்மை அடைய வைக்கும் மற்றும் முரட்டு தோலை மென்மையாக்கி அங்ஙனம், திசுக்கள் இன்சுலின்-சர்க்கரையை தங்கு தடையின்றி உள்வாங்கி கொள்ள உதவி செய்து, சர்க்கரை நோயின் கோர முகங்களை ஒன்றொன்றாக தணிக்கும். என்பதில் எந்த விதமான ஐயமும் கொள்ளத் தேவையில்லை.
சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணையை சிறிதளவு உணவில் சேருங்கள்.
நுகர்வோர் கவனக் குறிப்பு:
இந்த பரிந்துரைகள் எல்லாம், உயர் இரத்த அழுத்தம் இதயம், சிறுநீரக பாதிப்பு இல்லாதவர்களுக்கு ஏற்றது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
நினைவாற்றலை தரும் விளையாட்டுக்கள்
- கைவினை பொருட்கள் செய்வது.
- படம் வரைதல், சாயம் பூசுதல்.
- திருத்த வேலைகளை செய்வது.
- விடுகதை சொல்வது, கணக்கு போடுவது.
- காய்கறி தோட்டம், பூந்தோட்டம் அமைப்பது.
- ஆடுபுலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி விளையாடுவது.
- ஜபமாலை எண்ணுவது,
- எழுதுவது, படிப்பது, பாடுவது அல்லது கேட்பது.
- செல்லப்பிராணிகளை பராமரிப்பது.
- மழலைகளுடன் பேசுவது இணைந்து விளையாடுவது.
- இயற்கையின் இரைச்சலை ரசிப்பது.
இது போன்று ஏதாவதொரு வேலைகளை மூளைக்கு எப்பவும் கொடுத்துக் கொண்டே இருப்பது மூளைக்கு புத்துணர்வூட்டும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
எங்களுடைய மூளை என்றைக்குமே பச்சை புள்ளை தான் அது புதிது புதிதாக கற்றுக் கொள்ள எப்பவும் தயாராக இருக்கின்றது, சிலர் அதை கண்டு கொள்வதில்லை, நமது முன்னோர்கள் எதற்காக மலைகளை குடைந்து ஆலயங்கள் சிற்பங்கள் அமைத்தார்கள், உடல் மனம் இரண்டிற்கும் எப்பொழுதுமே வேலை வேண்டும், இல்லை என்றால் இரண்டும் சீக்கிரத்தில் வெறுமை அடைந்து போகும் என்பதைஉணர்ந்திருந்தார்கள்.