திங்கள், 31 அக்டோபர், 2016

ஹாலோவீன் ஆனந்தம் ஆனந்தம் மகிழ்ச்சி!

நாம் எல்லோருமே  வேடிக்கை விரும்பிகள் தான்.  சிரிப்பு, நக்கல், நையாண்டி, கேலி, கிண்டல்  எங்கள் வாழ்க்கை ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத பாசம், அதீதம் இல்லாத அன்பு மற்றும்  நண்பர்கள், குடும்பத்தினர்களுடன் இணைந்து தெளிவான, வெளிப்படையான ஒரு இயல்பான  வாழ்க்கை வாழும் விரும்பிகள் தான்.

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் பேய்கள், ஆவிகள் மற்றும் வேற்றுகிரகவாசிகள், அரக்கர்களையும்  இணைத்துக் கொள்ளும் ஒரு பயங்கரமான விளையாட்டுத்தான்  "ஹாலோவீன்" .

அக்டோபர் 31, நவம்பர் 1 இன்று, அனைத்து புனிதர்களின் ஆத்மா பெருவிழா "ஆவிகளின் திருநாள்"  அன்று இரவு நேரத்தில் கொண்டாடப்படுகின்ற,  சிறு பிள்ளைகளுக்கான ஒரு வேடிக்கை நிகழ்ச்சி தான் இது.

முதலில் இதனுடைய பாரம்பரியம்  அயர்லாந்து கத்தோலிக்க நாட்டுப்புற மக்களினால் கொண்டாடப்பட்டு இருக்கின்றது, 1830 பிறகு ஐரிஷ் கத்தோலிக்க மக்கள் அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர்  நினைவாக அவர்களின் பழக்க வழக்கங்களில் ஒன்றான 

இந்த "ஆவிகளின் திருநாள்"   பராமரிக்கப்படும் வகையில்  அவர்களின் வீடுகளில் ஆவிகளின் உருவப் பொம்மைகளை வைத்து தீபங்கள் ஏற்றி கொண்டாடினார்கள் என்பது ஒரு கடந்த கால செவிவழி தகவல். இதற்கெல்லாம் ஆதாரங்களை தேடி அலைய வேண்டியதில்லை.

ஐரிஷ் மக்களின் பாரம்பரியம் இன்று ஒரு மத சார்பற்ற வேடிக்கை நிகழ்வாக வெளிநாடுகளில் சிறுவர்களின் திருவிழாவாக மறுமலர்ச்சி பெற்றுள்ளது.

சிறுவர்கள் பேய்கள் மற்றும் அரக்கர்கள், பயங்கரமான  முகமூடி, உடைகள், முகப்பூச்சு அலங்கரிப்பு செய்து, இரவு நேரத்தில் வீடு வீடாக சென்று பெரியவர்களை பயம் காட்டி இனிப்புகள் சேகரிக்கும் ஒரு விநோத உடை நிகழ்ச்சி தான்  "ஹாலோவீன் வேடிக்கை"

குழந்தைகள் இந்த நாளில்  உங்கள் இல்லம் தேடி வருவார்கள் இனிப்புகள் வழங்கி அவர்களை சந்தோஷமாக துள்ளிக் குதிக்க வைத்து, மகிழ்ச்சியில் மலரும் அந்த ஆனந்த சிரி்ப்பை பரிசாக பெற்றுக் கொள்ளுங்கள்  என்றும் அன்புடன்  ....  மகேஷ்-இரவி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக