🐂மரபுவழித் தமிழர் கல்வி, வேளாண்மை தான்
நல்ல கல்வி மட்டுமல்ல, நல்ல உணவு தண்ணீர், நல் ஆரோக்கியத்தை உறுதியாக்கும் முற்காப்பு மருந்து மருத்துவம், சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் கொண்ட வாழ்விடங்கள் மற்றும் நல்ல வேலை வாய்ப்புக்கள் எல்லாம் பெரும் வசதி படைத்த மக்களால் மட்டும் தான் தொட்டுப்பார்க்க முடியும். ஏழை எளிய நடுத்தர மக்களினால் அதை அண்ணாந்து கூட பார்க்க முடியாது அவ்வளவு உயரத்தில் இருக்கும்
இந்த ஏற்றங்களுக்காக போராடி முற்றிலும் தோல்வியுற்ற வறிய எளிய மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஆயுதம் வேளாண்மை இந்த ஏற்றம் உங்கள் கைகளில் இருக்கும் மட்டும் உங்களை யாரும் மண்டி போட வைக்க முடியாது. நாளைய உலகம் ஒரு பிடி அரிசிக்காக உங்கள் கால்களில் மண்டியிட்டு காக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை,
வேளாண்மை மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் அற்புதமான ஒரு கருவி, நல்ல சமையல்காரன் அரை மருத்துவன் அந்த சமையலுக்கு தேவையான நல்ல காய்கறிகளை சாகுபடி செய்யும் உழவன் முழு மருத்துவன்.
என்னுடைய நாட்டில் 1977-78 ல், தேர்தல் மற்றும் சட்ட, கல்வி மற்றும் மருத்துவ மேல் நிலை பள்ளி படிப்புகளை விகிதாசார அடிப்படையில் ( இன/மொழி ரீதியான) ஒதுக்கீடு செய்தது அன்றய அரசு, நல்ல மதிப்பீடுகள் பெற்ற பல தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடர முடியாத இக்கட்டான ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.
இதன் விளைவு யாழ்பாணத்தில் நல்ல தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் உருவானது, இதை பொறுத்துக் கொள்ளாத அன்றய அரசு (....) மாணவர்கள் புரட்சிக்கு/யுத்தத்திற்கான களபலி கொடுக்கப்பட்டது பின்னால் நடந்தவைகள் அனைத்தும் உங்களுக்கு தெரியும். அதற்குள் நான் போக விரும்பவில்லை.
ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் கனணி, மருத்துவம் போன்ற பல துறைகளிலும் மற்றும் மூன்று நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்று நல்ல அறிவுள்ள ஒரு சமூகமாக இன்று வளர்ந்து உயர்ந்து நிற்கின்றது, ஈழத் தமிழர்களின் அழிவு ஒரு சாபமாக இருந்தாலும் இயற்கை அதை வரமாக மாற்றித் தந்திருப்பது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்றுதான் சொல்வேன்.
இன்றய உலகின் சுமார் 15,000 தக்காளி வகைகள் உள்ளன இதில் பெரும் எண்ணிக்கையிலான தக்காளி செடிகள் புது வகை பயிராக மனிதர்க http://mahesva.blogspot.de/2017/08/15000.html இதைப்பற்றி அறிந்து கொள்ள இதில் கிளிக் செய்யவும்
பரப்பிரமம் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.
பரப்பிரமத்தின் ஆட்சி மலரட்டும். ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக