ஜெர்மனியின் சிகப்பு அதிகாரம்
கட்டாய உழைப்பு - 1 யூரோ வேலை
ஜெர்மனியில், தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டாய உழைப்பு - 1, யூரோ வேலை தர நிர்ணயம் தொடங்கப்பட்டு, பத்து வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் இன்று இந்த கட்டாய உழைப்பு ஜெர்மன் மக்களினால் குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய ஒரு விடையமாக பார்க்கப்படுகின்றது.
அந்த சர்ச்சைக்குரிய காரணங்கள் பல, ஒருவர் தொடர்ந்து 25-30 வருடங்களுக்கு மேல் வேலை செய்து விபத்து அல்லது தீராத நோய்கள் அல்லது வேறு தனிப்பட்ட காரணங்களின் நிமித்தம் வேலையை இழந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டால், அவர்களுக்கு குறைந்தது ஒரு வருட வேலை இழந்தோர்க்கான தொகை வழங்கப்படும்,
அதற்குள்ளே அவர் ஒரு புதிய வேலையை தெரிவு செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் தொடர்ந்து அவருக்கு வேலைவாய்ப்பின்மை II (HartzIV) என்ற மூலோபாய அடிப்படையாக கொண்டு அவருடைய அடிப்படை வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய உதவிகள் செய்யப்படுகின்றது.
வேலைவாய்ப்பின்மை II (HartzIV) சமூக அமைப்பு சில கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் அடிப்படையில் தான் வேலை இழந்தோர் தொகையை வழங்குகின்றது.
- தங்கள் அமைப்புக்கு தெரியப்படுத்தாமல் பக்கத்து நகரத்துக்கு கூட செல்லக்கூடாது.
- தங்களுடைய கடிதம், போன் அழைப்புக்கு தாமதிக்காமல் பதில் சொல்ல வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் வேலை தேடும் முயற்சியில் இருக்க வேண்டும். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது.
- விலை உயர்ந்த வாகனம், பொருட்கள், தங்க நகைகள் மற்றும் வங்கி கணக்கு 4000 யூரோக்கு மேற்பட்டு வைத்திருக்க கூடாது மேலும் சொந்த வீடு வைத்திருந்தால் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம் ....?
- ஒருவர் படித்து பட்டம் பெற்று, உயர்ந்த பதவி வகித்து வேலை இழந்தவராக இருந்தாலும் அவர்கள் காட்டும் எந்த வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும், காரணங்கள் காட்டி மறுப்பு சொல்ல முடியாது. அதற்குள் இந்த கட்டாய உழைப்பு - 1, யூரோ வேலையும் அடங்கும் என்பது குறிப்பிட தக்கது.
- 21 நாட்கள் சுற்றுலா விடுமுறை எடுத்து கொள்ள அனுமதியுன்டு, அதுவும் அவர்கள் அனுப்பும் கடிதங்களை சேகரித்து வைத்துக் கொள்ள ஒருவரை ஒப்புதல் செய்து விட்டுத்தான் சுற்றுலா செல்ல வேண்டும், இல்லை என்றால் அனுமதி மறுக்கப்படும்.
இவ்வளவு ஏற்பாடுகளும் செய்த பிற்பாடு அவர்கள் அனுமதிக்கும் நாட்கள் மட்டுமே சுற்றுலா செல்ல முடியும், மறுப்பு தெரிவித்தால் செல்ல முடியாது மேலும் குறிப்பிட்ட தேதிக்குள்ளே சுற்றுலா விடுமுறை முடிந்து வீடு திரும்பி விட்டதாக அவர்களுக்கு அறிவித்தல் செய்ய வேண்டும், அப்படி செய்யாமல் போனால் அவர்கள் வேலை இழந்தோர் தொகையை நிறுத்தி விடுவார்கள்.
ஜெர்மனியிலுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ நிறுவப்பட்டது 1919) என்ன சொல்கின்றது என்றால் கட்டாய உழைப்பு ஜெர்மனி உட்பட ஐரோப்பா முழுவதும் தடை செய்யப்பட்ட ஒன்று, இருந்தும் ஜெர்மனி கட்டாய உழைப்பு - 1, யூரோ வேலையை, கட்டாயப்படுத்தி திணித்து வருகின்றது, இதன் பிடியில் சிக்கி தவிப்போர்கள் பலர்.
கட்டாய உழைப்பு - 1, யூரோ பணியிடங்களில் வேலை இழந்தோர்களை நடத்துகின்ற முறை மற்றும் சில கெடுபிடிகளை பற்றி பார்ப்போம்
உங்களுக்கு 55 வயது கடந்து கூட இருக்கலாம், அல்லது தீராத முதுகு வலி, முட்டி வலி, ஆஸ்மா( மூச்சிரைப்பு நோய்), சர்க்கரை நோய் இருந்தாலும் கூட அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டும்.
களைப்பாக இருந்தாலும் கூட கதிரையில் இருக்க கூடாது. 7-8 மணித்தியாலங்கள் நாண்டு கொண்டு நிற்க வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள்,, மூச்சிரைப்பு நோயாளிகள், இன்சுலின், மூச்சிரைப்பான் மருந்துகள் சரியான நேரத்தில் பயன் படுத்த சரியான நேர அனுமதி கிடையாது. பணி உடை மாற்றும் அறை மற்றும் ஓய்வு அறைகளை எப்பவும் பூட்டியே வைத்திருப்பார்கள்.
இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்க, அல்லது தொடக் கூட அனுமதி கிடையாது. அவர்கள் அனுமதித்தால் மட்டும் பாவிக்க முடியும், பாரங்கள் தூக்க, குழி பறிக்க மண் சுமக்க கல்லுடைக்கும் அடிமட்ட, முட்டாள் வேலைக்கு மட்டும் ஆட்கள் தேவை, வேண்டும்என்றே தூசிகளை கிழப்பி நோயாளியாக்கி அலைய விடுவார்கள்.
மூளையை மழுக்கடிக்கும் வேலையை: கிட்டத்தட்ட ஓட்டை வாளியில் தண்ணீர் இறைப்பதற்கு சமனான ஒரு வேலையைத்தான் பெரும்பாலும் செய்கின்றார்கள் என்பது மன வருத்தத்திற்கு உரிய ஒன்று
1-யூரோ வேலை நிபந்தனைகள்
வேலை நேரம் மற்றும் காலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் விடுமுறை காப்பீடு ஒருங்கிணைப்பு ஒப்பந்தம்
ஒரு யூரோ வேலை, எடுத்துக்காட்டாக, ஒரு மணி நேரத்திற்கு 1 யூரோ அல்லது 1.25 யூரோக்கள், 1.50 யூரோக்கள் மற்றும் அரிதாக, இரண்டு யூரோக்கள் வழங்கப்படுகிறது.
ALG II உதவி பெறும் 15- 25 இளம் பருவத்தினர் 1-யூரோ வேலை நிபந்தனைகள் அதிகபட்சம் 3 மாதங்கள் கடுமையான விதிகள் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள படுகின்றது ஒரு சிலர் நியாயமான ஒரு யூரோ வேலையை ஏற்க மறுக்கின்றனர்.
இரண்டு வகை நேர கால எல்லைகள் உண்டு. மூன்று மாதங்கள் அல்லது ஒன்பது மாதங்கள் வரை இவ்வாறு, வாரத்தில் 15 மணித்தியாலங்கள் மற்றொண்டு 30 மணித்தியாலங்கள் இது திரும்பவும் புதிப்பிக்க படலாம்
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் கட்டாய பணி இல்லை.
நோய்களுக்கான விடுப்பு நாட்களுக்கு ஊதியம் கிடையாது. வேலை செய்யும் மணித்தியாலங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும்.
போக்கு வரத்து பயணச்சீட்டு, பணி உடைகள் மற்றும் பாதுகாப்பு கையுறைகள் வழங்கப்படும்.
காலை சிற்றுண்டி, மதிய உணவு குறைந்த விலையில் கிடைக்கின்றது. உணவின் தரம், சுகாதாரம் பற்றி எனக்கு சரியாக தெரியாது. ஒரு சிலர் குறை சொல்கின்றனர் வேறு சிலர் உண்ணும் படி இருக்கின்றது என்கின்றார்கள்.
வெளிநாடுகளில் புலம்பெயர் மக்கள் சுகமாக வாழ்கின்றார்கள் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு, அவர்கள் எவ்வளவு அழுத்தத்தில் வாழ்கின்றனர் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம் இங்கு வேலை வாய்ப்பு என்பது குதிரைக்கொம்பு, இயந்திரங்கள், தானியங்கி ரோபோட்களின்
ஆக்கிரமிப்பு மனிதனின் வேலையை தட்டிப்பறித்திருக்கின்றது என்பது தான் உண்மை.
வேலை தேடுபவர்களின் அடிப்படை பாதுகாப்பு உள்ளடக்கங்களை கொண்ட, சமூக சட்ட புத்தகம் II http://www.sozialgesetzbuch-sgb.de/sgbii/1.html
கட்டாய உழைப்பு - 1 யூரோ வேலை ஒரு வீடியோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக