📭 மலை ஆடுகள்: எரிமலை சீற்றத்தை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளது. அந்த ஆடுகள் ஒரு மாதத்திற்கு முன் கூட்டி அந்த மேச்சல் நிலங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளும் அறிவுள்ள ஜீவன். அந்த மலை ஆடுகள் எப்படித்தான் எரிமலை சீற்றத்தை முன் கூட்டியே அறிந்து கொள்கின்றன என்பது தான் சுவாரஸ்யமான சமாச்சாரம்,
மண்னில் இருந்து கிளம்பும் வாயுக்களின் தன்மைகளை பிரித்தறிந்து இது எரிமலை சீற்றத்தை ஏற்படுத்தும் வாயுக்களின் நாற்றம் என்று உணர்ந்து தப்பித்து கொள்வது மட்டுமல்லாமல் மனிதனையும் அந்த வாயில்லா ஜீவன்கள் எச்சரிக்கின்றது. மனிதன் இதையெல்லாம் உணராமல்த்தான் நன்மை பயிர்க்(ற்)கும் காட்டு விலங்குகளை எல்லாம் அழித்துக் கொண்டிருக்கின்றான்.
📭 தீக்கோழி: பயிர்களையும் குடியிருப்புகளையும் அச்சுறுத்தும் ஓநாய், புலி, சிறுத்தை, யானைகளை விரட்ட, காட்டு ராஜா சிங்கத்தை யாராவது வீடுகளில் வளர்க்க முடியுமா, அதற்கு பதிலாக தீக்கோழிகளை வளர்த்துக் கொள்ளலாம் ஏனென்றால், தீக்கோழிகள் எதிரிகளை துரத்த, மாற்று குரல் மன்னன் (மிமிக்கிரி) செய்வதில் பலே கில்லாடி, தன்னுடைய குஞ்சுகளை ஊனுண்ணி விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள சிங்கம் போல் கர்ஜிக்கும் அற்புத திறன் படைத்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக